செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (15:56 IST)

சென்னை பைனான்சியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

arrested
சென்னையில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
சென்னை அமைந்தகரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகம் என்ற பைனான்சியர் மர்மநபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஏற்கனவே இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிஷோரிடம் இந்த கொலை வழக்கு பற்றிய விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது