Daily Horoscope
✕

சென்னையில் 7 நாட்கள் முழு முடக்கம்! – அதிகாரிகள் ஆலோசனை!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 8 ஜூன் 2020 (09:36 IST)
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முழு முடக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலோசித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் மொத்தமாக 7 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments