1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (08:10 IST)

சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு கொண்டு வந்த தொழிலபதிபர்.. பரபரப்ப்பு தகவல்..!

airport
சென்னை விமான நிலையத்திற்கு வந்த தொழிலதிபர் ஒருவர் ஐந்து துப்பாக்கி குண்டுகள் கொண்டு வந்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக தொழிலதிபர் ராஜ்குமார் என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது உடமைகள் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது அவரது பையில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 
 
இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்யப்பட்ட போது அவர் முறையாக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் பயன்படுத்துவதற்காக தான் அந்த துப்பாக்கி குண்டுகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிய வந்தது. 
 
மேலும் தனது கார் ஓட்டுனர் பையை தவறுதலாக மாற்றிக் கொண்டு வந்து விட்டதால் துப்பாக்கி குண்டு உள்ள பை தன்னிடம் வந்து விட்டது என்று கூறினார். இதனை அடுத்து தொழிலதிபர் இடம் விசாரணை செய்து அவரை பயணம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதித்தனர்.
 
Edited by Siva