1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (07:46 IST)

சென்னை, பெங்களூரு, லக்னோ, மும்பை.. வெளியேற போகும் அணி எது?

நேற்று நடந்த பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. 
 
தற்போது குஜராத் அணி முதல் இடத்திலிருக்கும் நிலையில் சென்னை, லக்னோ, பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளில் மூன்று அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன. இவற்றில் ஒரு அணி வெளியேறும் என்பது வெளியேறும் அணி எது என்பதை அடுத்தடுத்து வரும் போட்டிகள் தான் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று நடைபெற இருக்கும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு மிகச் சிறிய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாளை நடைபெற இருக்கும் சென்னை - டெல்லி போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும். 
 
நாளை மறுநாள் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இன்னும் ஐந்து லீக் போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் 5 போட்டிகளுமே அனைத்து அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva