Daily Horoscope
✕

சீமான் கூறியது எல்லாமே பொய்!.. Chatgpt மூலம் தெரியவந்த உண்மை!...

Updated: வெள்ளி, 25 செப்டம்பர் 2026 (21:35 IST)
15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கியவர் சீமான். சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதால் அரசியல் மேடைகளில் நிறைய கதைகளை சொல்லுவார். அந்த கதைகளை சுவாரசியமாகவே சொல்வார். ஆனால் அவர் சொல்லும் பல கதைகள் உண்மை இல்லை என பலரும் ட்ரோல் செய்கிறார்கள்..

அதைப்பற்றி பெரிய விளக்கங்களை சீமான் கொடுப்பதில்லை. கடந்த 15 வருடங்களாக திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து வந்த சீமான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக முதலமைச்சர் விஜயின் நடவடிக்கைகளை அவர் விமர்சனம் செய்து பேசி வருகிறார்..

இந்நிலையில், சீமான் கூறிய சில கருத்துக்களை மாறாக Chatgpt  கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 7 லட்சம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர் என சீமான் பேசியிருந்தார். ஆனால் இந்தியாவில் மொத்தம் 5755 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர் என Chatgpt கூறியிருக்கிறது.

சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனம் ஆண்டுக்கு 50 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்கிறது என்ன சீமான் பேசியிருந்தார். ஆனால் அந்த நிறுவனம் வருடத்திற்கு 8.24 லட்சம் கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது என Chatgpt தெரிவித்திருக்கிறது..

திருப்பூர் கோவை ஈரோடு பகுதியில் 1.5 கோடி வட இந்தியர்கள் இருக்கின்றனர்.. அவர்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர் என சீமான் பேசியிருந்தார்.. ஆனால் அந்த பகுதியில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை மட்டுமே வட இந்தியர்கள் வசிக்கின்றனர் என Chatgpt கூறியிருக்கிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments