1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. twenty lakhs joined in we the leaders

அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் இயக்கத்தில் 20 லட்சர் பேர்!.. விஜய்க்கு டஃப் கொடுப்பாரா?!..

annamalai
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக அரசியலுக்கு திடீரென எண்ட்ரி கொடுத்தார். அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் பாஜக கொஞ்சம் வளர்ச்சி பெற்றது என்று சொல்லலாம்.

அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி அதிகரித்தது.
கடந்த திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவை விட அண்ணாமலைதான் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். தினமும் செய்தியாளர்களை சந்திப்பது, திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக ஆக்டிவாக வலம் வந்தார்.

ஆனால் உள்கட்சி பிரச்சனை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகினார். மேலும் ‘வீ தி லீடர்ஸ்’ என்கிற இயக்கத்தையும் அவர் துவங்கினார். அந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் ஆன்லைனில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது அந்த இயக்கத்தில் 20 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் இணைய முடியாதவர்கள் Missed Call மூலம் இயக்கத்தில் இணையும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். அதற்கான மொபைல் என் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என வீ த லீடர்ஸ் இயக்கம் அறிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பா?