1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2025 (18:11 IST)

மெட்ரோ போலவே புறநகர் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Electric Train
ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ போக்குவரத்து சேவைகள் மாற்றம் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இந்த நிலையில் புறநகர் சேவைகளும் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் சென்று விட்டதால் பயணிகள் குறைந்த அளவில் இருப்பார்கள். எனவே அட்டவணை மாற்றப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Edited by Siva