திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2025 (13:31 IST)

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆமைகள்: வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!

Turtles
சென்னை கடற்கரையில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதை பார்த்து, வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அருகே உள்ள நெமிலிகுப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும், அதேபோல் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் 8 ஆமைகள் இறந்து கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
 
ஏற்கனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று சில ஆமைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொத்துக்கொத்தாக ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியிருப்பது வன விலங்குகள் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடல் நீரை குடிநீர் ஆக்கும் பணிகளுக்காக நெமிலிகுப்பம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி உயிரிழந்திருக்கலாம். மேலும், ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என கூறியுள்ளார்.
 
 
Edited by Siva