தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறாரா? அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில், பாஜகவின் மாநில கட்சி தலைவர்கள் மாற்றப்பட இருப்பதால், இதற்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மாவட்ட தலைவர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, மாநில தலைவர்களின் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதால், தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் கிரன் ரெட்டி நாளை மறுநாள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, மாநில தலைவரை மாற்றுவது குறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை இருக்கின்ற நிலையில், 2026 தேர்தல் வரை அவர் தான் இந்த பதவியில் நீடிப்பார் என்றும், அவரது தலைமைக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்து தெரிவித்துக்கொள்கிறேன். திமுக போன்ற வலிமையான கட்சியை எதிர்க்க, இப்போதைக்கு அண்ணாமலை தான் சரியான நபர் என்று பாஜக மேல் இடம் கருதுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Edited by Mahendran