ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (14:17 IST)

சட்டப்பேரவையில் காவிரி தீர்மானம்.. மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு..!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பில் வரையறுக்கப்பட்ட நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தி சமீபத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.
 
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேரவைச் செயலகம்  மூலம் இன்று தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேறிய தினமே சட்டசபை செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன்பிறகு தீர்மானத்தின் நகல் முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran