1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (16:44 IST)

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அலிகார் ஐஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் நிகழ்ந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 121 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளார் என்பதன் அந்த குழு தற்போது விசாரணையை தொடங்கிவிட்டது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்ததில் தற்போது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன பிரகாஷ் மதுகர் என்பவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran