வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (16:35 IST)

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

modi putin
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்வதாகவும் ரஷ்ய பயணத்தின் போது அவர் ரஷ்ய பிரதமர் புதின் உடன் முக்கிய பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பல நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார் என்பதும் அதனால் உலகம் முழுவதும் இந்தியாவுடன் நட்பு உறவு ஏற்பட்டுள்ளது என்பதும் பல முதலீடுகள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா செல்ல இருப்பதாகவும் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்யா இடையிலான ஆண்டு கூட்டத்திலும் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் அவர் ஆஸ்திரியா செல்ல இருப்பதாகவும் அதன் பிறகு அவர் இந்தியா திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்னர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran