புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (10:09 IST)

CAA எதிர்ப்பு போராட்டம்... சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை !

CAA எதிர்ப்பு போராட்டம்... சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று  முன் தினம் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் போராட்டம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் பேரவையில் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என முஸ்லிம் தலைவர்கள் டெரிவித்துள்ளனர்.  
 
மேலும், வரும் 19 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆலோசனை நடந்த்தி வருகின்றனர்.