செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (09:37 IST)

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுக எம் பி செந்திலும் கைது செய்யப்பட வேண்டும் - ஹெச்.ராஜா

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுக எம் பி செந்திலும் கைது செய்யப்பட வேண்டும் - ஹெச்.ராஜா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று  முன் தினம் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாஜக தேசிய செயலர்  ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,  சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்களும் திமுக எம்.பி செந்திலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் போராட்டம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.