Daily Horoscope

மன்னிப்பா நெவர்... ரஜினிகாந்துக்கு சலாம் போட்ட பாஜக!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 21 ஜனவரி 2020 (12:00 IST)
1971 ஆம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி கூறியதை பாஜகவினர் வரவேற்றுள்ளனர். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.  
 
இப்படிப்பட்ட பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு...  
1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேர்ணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. 2017 ஆம் ஆண்டு இந்துவின் அவுட்லுக் பத்திரிக்கையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என அதன் ஆதாரத்தையும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு காட்டினார்.  
 
ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். 1971 ஆம் ஆண்டும் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம். இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. எனவே நான் இதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கமாட்டேன் என பேட்டியளித்தார். 
 
இதற்கு பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கொளத்தூர் மணி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் பாஜக நிர்வாகி கே.டி ராகவன் ஆகியோர் ரஜினியை பாராட்டியுள்ளனர். மேலும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments