புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (19:37 IST)

புல்லரிக்கும் வெறித்தனமான சாங் "சும்மா கிழி" பாடல் வீடியோ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது.   
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் சூப்பர்ஸ்டார் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். படம் வெளியாகி வெறும் ஒன்பது நாளில் 150 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் வெகுவாக ஈர்த்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "சும்மா கிழி"  பாடல் வீடியோ சற்றுமுன் யூடியூபில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.  தலைவரின் யங் ஆன ஸ்டைலான டான்ஸ் இந்த பாடலில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. நீங்களே பாருங்கள்..இதோ அந்த பாடல்.