வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (10:37 IST)

சாரி, மன்னிப்பு கேட்க முடியாது... ஆதாரத்துடன் ஆஜாரான ரஜினி!!

1971 ஆம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது. 
 
இப்படிப்பட்ட பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு... 
 
1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேர்ணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. 2017 ஆம் ஆண்டு இந்துவின் அவுட்லுக் பத்திரிக்கையில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது என அதன் ஆதாரத்தையும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு காட்டினார். 
 
ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். 1971 ஆம் ஆண்டும் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம். இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. எனவே நான் இதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கமாட்டேன் என பேட்டியளித்துள்ளார்.