வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:19 IST)

அன்றும் இன்றும் என்றும் ரஜினி: விஜய்-க்கு போட்டியாக டிரெண்டிங்!!

டிவிட்டரில் அன்று எம்ஜிஆர் இன்று விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டான நிலையில் தற்போது அன்றும் இன்றும் என்றும் ரஜினி என்ர ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழக முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான எம்.ஜி.ராமசந்திரனின் 103வது பிறந்தநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரையும், விஜய்யையும் ஒப்புமைப்படுத்தி ட்விட்டரில் “அன்று எம்ஜிஆர், இன்று விஜய்” என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கினர்.
 
தற்போது இதற்கு போட்டியாக ரஜினியின் ரசிகர்கள், ”அன்றும் இன்றும் என்றும் ரஜினி” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். ரஜினியை யாருடனும் ஒப்பிட முடியாது, அவர் என்றுமே யுனிக் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.