1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:00 IST)

ஜொல்ளு விட்டு, தாலி கட்டி, குட்டி போட்டு... எஸ்.வி சேகர் மோசமாக சாடுவது யாரை??

நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட நபரை சாடி மோசமான டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜொல்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பொரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குறைக்கும் என பதிவிட்டுள்ளார். 
 
எஸ்.வி சேகர் இந்த பதிவை, திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். எனவே அவரை விமர்சிக்கும் வகையில் இந்த பதிவு இருப்பதாக தெரிகிறது.