வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (17:55 IST)

திருவிழாக்களில் ஒலிப்பெருக்கி மீதான கட்டுபாட்டை தளர்த்த வேண்டும்; வைகோ கோரிக்கை

கிராம திருவிழாக்களில் 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்கி அதிகாலை 2 மணி வரை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் இசைக்கச்சேரிகள், வில்லுப்பாட்டு, கரகாட்டம் ஆகியவை இரவு முழுவதும் நடைபெறும். ஆனால் சமீப காலமாக இரவு 10 மணி வரை தான் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை கட்டுப்பாட்டால் தற்பொழுதெல்லாம் அவ்வாறு நடப்பதில்லை.

இந்நிலையில் இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கிராமக் கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்தும் நேரத்தை 10 மணியிலிருந்து அதிகாலை 2 மணி வரை மாற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் அவர், “விழா கமிட்டியினர் கோயில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆதலால் விழாக்களுக்கு அனுமதி பெரும் முறையை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அனுமதி வழங்கிடும் வகையில் மாற்ற வேண்டும், பாதுகாப்பிற்கு காவலர்களுக்கு கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” எனவும் வைகோ கூறியுள்ளார்.