திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (17:09 IST)

ஹார்ட் அட்டாக்கே வரும் போலயே... சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரம்!!

சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் படைப்புகளுக்கான இந்திய விலையை நிர்ணயித்துள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 
 
இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இவற்றின் விநியோகம் மார்ச்  6 ஆம் தேதி முதல் துவங்குகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
விலை விவரம் இதோ... 
1. சாம்சங் கேலக்ஸி எஸ்20 8 ஜிபி + 128 ஜிபி மெமரி ரூ.66,999 
2. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி ரூ.73,999 
3. சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 8 ஜிபி + 128 ஜிபி மெமரி ரூ.92,999