1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாடம் உணவில் முடகத்தான் கீரையை பயன்படுத்துவதால் இத்தனை பயன்களா...?

முடக்கத்தான் கீரையை காலை வெறும் வயிற்றில் பச்சையாக கூட சாப்பிடலாம். உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் சாதாரண கீரைகள்  பயன்படுத்துவது போன்று இந்த முடக்கத்தான் கீரையை கூட்டாக பயன்படுத்தாலாம். 

இந்த முடக்கத்தான் கீரையை சூப் வைத்தும் சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை நீரால் அலசி சுத்தம் செய்து, நிழலில் காயவைத்து  பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தோசை மாவில் கலந்து தோசை செய்து சாப்பிட்டும் வரலாம். நல்ல பலன் கிடைக்கும். இரசம் போல் வைத்து, உணவோடு கலந்தும் சாப்பிடலாம்.
 
முடக்கதான் கீரையை பயன்படுவதால், நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலியை சரிசெய்வதில் ஓரு சிறந்த மூலிகை இது. மேலும் வாயு தொல்லையை நீக்கி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. 
 
கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது. மேலும் முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது. குடலிறக்க நோய்களையும் சரிசெய்யக் கூடியது.மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்யக் கூடியது.
 
முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து, காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும். இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து, கர்பிணி பெண்களின் அடிவயிற்றில் பூசி வர, பிரசவம் சுகபிரசவமாக அமையும். மேலும், குழந்தை பெண்களுக்கு இந்த முடக்கத்தான் கீரையை பெற்ற  பெண்களின் அடிவயிற்றில் அரைத்து பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
 
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து, உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
 
முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர, சொறி, சிரங்கு, கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும். மேலும் இந்த  கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
 
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும். வீரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின்  மீது பற்றுப்போட விதை வீக்கம் குணமாகும்.