Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் கல்யாண்ராம் நள்ளிரவில் திடீர் கைது!

Written By siva
Published: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (08:19 IST)
பாஜக பிரமுகர் கல்யாண்ராம் நள்ளிரவில் திடீர் கைது!
பாஜக பிரமுகர் கல்யாண் ராம் என்பவர் திடீரென நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக பிரமுகர் கல்யாண்ராம் என்பவர் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு பாஜக பிரமுகர் கல்யாண்ராம் அவர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
ஏற்கனவே நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்யாண்ராம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கல்யாண்ராம் கைதுக்கு பாஜக தொண்டர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments