வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:57 IST)

4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: பாஜக பிரமுகர் வரவேற்பு!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கவேண்டும் என நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதை அடுத்து இந்த கடிதத்திற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திரிபாதி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பண்டிகைகளின் போது, குறிப்பாக தீபாவளியின் போது இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
இதை நாம் வரவேற்கிற அதே நேரத்தில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதில் விதிக்கப்படும் பல்வேறு நேரக்  கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் முழுமையாக கொண்டாட ஆவண செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்