முன்னாள் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானார் !
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் கொரோனா குறித்த தகவல்களை தொலைக்காட்சியின் மூலம் பேட்டி அளித்த முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ,தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் கொடுத்த கொரோனா தகவல் மட்டுமின்றி அவர் அணிந்து வந்த உடையும் பரபரப்பாக இணையதளங்களில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுகாதாரதுறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் திடீரென அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார். தற்போது அவர் வணிகவரித் துறை செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் வணிகவரித் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களின் தந்தை வெங்கடேசன் என்பவர் திடீரென காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வெங்கடேசன் அவர்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் அவர்களின் கணவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முன்னாள் டிஜிபி வெங்கடேசன் அவர்களின் மறைவிற்கு சக அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்