குறட்டை விட்ட தந்தை; அடித்துக் கொன்ற மகன்! – உ.பியில் பரபரப்பு!
உத்தர பிரதேசத்தில் தந்தையின் குறட்டை சத்தம் தாளாமல் மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பலிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன். கூலி வேலை பார்த்து வரும் இவர் வேலை முடிந்து வந்து வீட்டில் அசந்து தூங்கியுள்ளார். அப்போது அவரது வயதான தந்தை அருகில் தூங்கி கொண்டிருந்தவர் குறட்டை விட்டுள்ளார். இதனால் சரியாக தூங்க முடியாததால் ஆத்திரமடைந்த நவீன் அருகில் இருந்த கனமான பொருளால் தனது தந்தையை தாக்கியுள்ளார்.
இதனால் அவரது தந்தை மயக்கமடைந்த நிலையில் அவரது இன்னொரு மகன் மனோஜ் என்பவர் தந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நவீனை கைது செய்துள்ளனர். குறட்டை சத்தத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.