திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (21:09 IST)

ஏ.டி.எம் இயந்திரத்தை பூட்ட மறந்த ஊழியர்: சிதறிய லட்சக்கணக்கான பணம்

ஏ.டி.எம் இயந்திரத்தை பூட்ட மறந்த ஊழியர்
ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு அதனை ஊழியர் பூட்ட மறந்ததால் அதிலிருந்த லட்சக்கணக்கான பணம் சிதறியதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
புதுச்சேரியில் உள்ள கனரா வங்கி ஒன்றில் சமீபத்தில் பணத்தை நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்கள் வந்தனர். பணத்தை நிரப்பி முடித்துவிட்டு அதனை பூட்ட மறந்து விட்டனர். இதனை அடுத்து அதில் இருந்த பணம் வெளியேறி சிதறி ஏடிஎம் அறைக்குள்ளேயே இருந்தது 
 
இந்த நிலையில் அங்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தின் முன் லட்சக்கணக்கான பணம் சிதறி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார் 
 
இதனை அடுத்துவிரைந்து வந்த போலீசார் மற்றும் கனரா வங்கி அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்தனர் அப்போது ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு ஊழியர்கள் பூட்டாமல் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து பணத்தை நிரப்பிவிட்டு பூட்டாமல் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் இரண்டு பேர்களை விசாரணை செய்து வருகின்றனர்
 
நிஜமாகவே பூட்ட மறந்து விட்டார்களா? அல்லது அவர்கள் பூட்டாமல் போனதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஏடிஎம் இயந்திரம் பூட்டாததால் லட்சக்கணக்கான பணம் சிதறி கிடந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது