1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (20:10 IST)

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: ஸ்டேட் வங்கியின் அறிவிப்பா இது?

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் மெய்ண்டன் செய்யாவிட்டால் அபராதம் விதித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ஸ்டேட் வங்கி, தற்போது திடீரென சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது 
 
ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாநகரம், நகரம், மற்றும் கிராமப்புறம் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.3000, ரூ.2000, ரூ.10000 என மினிமம் பேலன்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது 
 
அவ்வாறு மினிமும் பேலன்ஸ் வைக்காதவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 5 முதல் 15 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதத் தொகையே கோடிக்கணக்கில் ஸ்டேட் வங்கிக்கு வருமானம் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக இனிமேல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம் கட்டி அவதி அடைந்த பல வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை முடித்துக் கொண்டதால் ஸ்டேட் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதனை அடுத்து ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்