ஒரு நபரை காலால் எட்டி உதைத்த மகளிர் காவல் ஆய்வாளர் !
ஒரு நபரை காலால் எட்டி உதைத்த மகளிர் காவல் ஆய்வாளர் !
தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிசிஐடி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிவரும் சபீதா, ஒரு நபரை வார்த்தை மீது அவரை எட்டி உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சபீதா வீட்டில் மாரியம்மாள் என்பவர் வேலை பார்த்து வந்தாள். அவரை பார்க்க அவரது உறவுக்காரர் சங்கர் வந்துள்ளது. அப்போது, சபீதாவும் அவரது கணவரும் மாரியம்மாளை உறவினருடன் தொடர்பு படுத்தி பேசி, சங்கரையும் அவரையும் ததாகாத வார்த்தைகளால் திட்டி எட்டி உதைத்துள்ளார்.
இதனால், மனமுடைந்த மாரியம்மாள் தூக்கமாத்திரை தின்று தற்கொலை முயன்று, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட அவர், எஸ்.பி மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரை அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.