புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (21:00 IST)

கமல், ஷங்கர் இல்லாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பா? அதிர்ச்சி தகவல்

கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் போலீஸ் விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் களிடமிருந்து தகவல் வெளிவந்தது 
 
இதனை அடுத்து திடீர் திருப்பமாக இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவல் தற்போது உண்மை என்று கூறப்படுகிறது. ‘இந்தியன் 2’  படத்திற்கான பாடல் ஒன்றை வெளிநாட்டில் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். இதற்கான அனுமதியும் அந்நாட்டு அரசிடம் பெறப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது
 
ஆனால் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படக்குழுவினர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அந்நாட்டு அரசிடம் வாங்கி அனுமதியை வேஸ்ட் செய்ய விரும்பாத ஷங்கர், தனது உதவியாளர்களை அனுப்பி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டார்
 
கமல், ஷங்கர் இல்லாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பா
தற்போது ஷங்கரின் உதவியாளர் இருவர் தான் வெளிநாட்டில் அந்த பாடலை படமாக்கியதாகவும் இந்த பாடலில் காஜல் அகர்வால் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலில் கமல் நடிக்க வேண்டிய காட்சி இருந்தது என்றாலும் அவர் நடிக்க செல்லவில்லை என்றும் அவரது காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது 
 
இந்த நிலையில் முதன்முதலாக கமல் மற்றும் ஷங்கர் இல்லாமலே ’இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது