திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:57 IST)

என்னை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவார்களா? அண்ணாமலை கேள்வி..!

2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அண்ணாமலையை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிய நிலையில் அதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தி கூட்டணியே இருக்காது என்றும் அந்த கூட்டணி இருந்தால் தானே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்

இந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு சில கட்சிகள் விரைவில் வெளியேறும் என்றும் இந்தி கூட்டணியே காணாமல் போய்விடும் என்றும் அவர் கூறினார்.  

இந்தி கூட்டணி பிஸ்கட் மற்றும் டீ சாப்பிட மட்டும் தான் உதவும் என்றும் 2024 தேர்தலுக்குள் ஆட்சியை இந்தி கூட்டணியை இருக்காது என்றும் அதன் பிறகு எப்படி ஆட்சியை பிடிப்பார்கள் என்னை கைது செய்து திகார் ஜெயிலில் வைப்பார்கள் என்றும் அண்ணாமலை பதிலளித்தார்

Edited by Siva