திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (13:22 IST)

பொன்முடியை அடுத்து 4 அமைச்சர்கள்.. பட்டியலிட்ட அண்ணாமலை..!

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சராக இருந்த பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து இன்னும் நான்கு அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டார்.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன்,   தங்கம் தென்னரசு மற்றும் மீண்டும் பொன்முடி அவர்கள் மீது உள்ள அமலாக்கத்துறை வழக்கு என நான்கு வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு வரும் என்றும் அப்போது யார் யார் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் தெரியவரும் என்று தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 11 அமைச்சர்கள் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும் இது ஒரு வித்தியாசமான கேபினேட் அமைச்சரவை என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் அந்த தீர்ப்புகள் எப்போது வரும் என்பதுதான் நாங்கள் காத்திருக்கின்றோம்,  கண்டிப்பாக அடுத்தடுத்து தீர்ப்புகள் வரும்போது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்  

இப்படி ஒரு சூழல் தமிழகத்தில் இருந்தது கிடையாது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Edited by Mahendran