ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (07:42 IST)

அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்கான 10 கோடி ரூபாய் என்ன ஆனது? அண்ணாமலை

அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்கான  10 கோடி ரூபாய் என்ன ஆனது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தகவலை தரவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா  தெரிவித்த நிலையில் அதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தை பொருத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும் என்றும் ஒரு இடத்தில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெயும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது முதல் பட்ஜெட்டில் அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.  

சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த கம்ப்யூட்டர் எங்கே என்ற கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva