செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (19:23 IST)

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? ராஜராஜ சோழன் குறித்து அன்புமணி

Anbumani
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்றும் தமிழர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கூறுவது எல்லாம் ஒரு பிரச்சனையா என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 
 
பாமக தலைவர் அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று கமல்ஹாசன் வெற்றிமாறன் உள்பட ஒரு சிலர் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது 
 
அப்போது அவர் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை, இந்துக்கள் தமிழர் இல்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? இப்போது எங்கள் மக்களுக்கு சோறு இல்லை. அது குறித்து பேசுங்கள்,
 
 நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருக்கும் நிலையில் அந்த பிரச்சனைகள் குறித்து பேசாமல் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து இல்லை என்று பேசுவது தான் இப்போது முக்கியமா? தற்போதைய முக்கிய பிரச்சனை சுற்றுச்சூழல் அதைப்பற்றி பேசுங்கள் என்று காட்டமாக பதில் அளித்தார்.
 

Edited by Siva