மத அடிப்படையில் நான் இந்து இல்ல..!? – இயக்குனர் ராஜமௌலி தடாலடி!
சமீப காலமாக இந்து மதம் குறித்த சர்ச்சைகள் சினிமாவில் அதிகரித்துள்ள நிலையில் தற்போது இந்து மதம் குறித்து தனது கருத்தை இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்கள் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜராஜசோழனை இந்து அரசராக சித்தரிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பலரும் அவர் இந்து மத அரசர்தான் என்றும், அப்போது இந்து மதம் இல்லை அவர் சைவராக இருந்தார் என்றும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து இந்து மதம் குறித்த வாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இந்து மதம் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தான் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இந்து மதம் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார். அதில் “பலர் இந்து என்பதை மதம் என நினைக்கிறார்கள். இப்போதுதான் அது மதம். அதற்கு முன்பு அது இந்து தர்மமாக இருந்தது. இந்து தர்மம் என்பது மதமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.
மதமாக பார்த்தால் நான் இந்து கிடையாது. அதேசமயம் இந்து தர்மம் என்ற வாழ்க்கை முறையாக பார்த்தால் நான் தீவிர இந்து. நான் எனது படத்தில் சித்தரிப்பது எல்லாம் பல நூற்றாண்டுகளாக இருக்கும் வாழ்க்கை முறையைதான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டுமென இந்து தர்மம் போதிப்பதால் அதை நான் பின்பற்றுகிறேன்” என கூறியுள்ளார்.
Edited By: Prasanth.K