1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (12:01 IST)

மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அன்பின் மகேஷ்!

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

 
அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியது காரணமில்லை என தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். மேலும் அவர் தனது பேட்டியில், பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது என தெரிவித்தார்.

அதோடு, குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.