1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (09:42 IST)

சென்னையில் அல்ஃபா கேர் மருத்துவமனை உதயம்..! திறந்து வைத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!

radhakrishnan
சென்னை கீழ்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அல்ஃபா கேர் மருத்துவமனையை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். 
 
சென்னை கீழ்பாக்கத்தில் புதிதாக  அல்ஃபா கேர் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் மருத்துவ சிகிச்சையின் விளைவுகள் மீது எவ்வித சமரசமின்றி, நோயாளிகள் விரைவாக மீண்டு குணமடைவதில் சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு புதிய யுகத்தை உடல்நல பராமரிப்புத் துறையில் இதன்மூலம் தொடங்கியிருக்கிறது. 
 
சென்னை மாநகராட்சியின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலருமான டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.
 
உலக வங்கிகள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் செயல்திட்டத்தின் இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் தென்காசி எஸ். ஜவஹர் ஐஏஎஸ்,  மருத்துவமனையின் நிறுவனர் & தலைவர் டாக்டர். பாபு நாராயணன் மற்றும் இதன் நிறுவனர், நிர்வாக இயக்குனர் ஜே. ஏடெல் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். 
 
தொடக்கவிழாவின் ஒரு அங்கமாக ரூ.299 என்ற சிறப்பு சலுகை விலையில் ஹீமோகுளோபின், இரத்த சர்க்கரை, இரத்த கொலஸ்ட்ரால், தைராய்டு விவரக்குறிப்பு, கல்லீரல் அளவீடுகள் மற்றும் சிறுநீரக அளவீடுகள் ஆகியவை தொடர்பான நோயறிதல் சேவைகள் மற்றும் உடல்நல பரிசோதனை திட்டத்தை பொதுமக்களின் நலனுக்காக இம்மருத்துவமனை 2024 ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு வழங்குகிறது. 
 
40 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை, பிரமாதமான மற்றும் பிரத்யேகமான சிகிச்சையை வழங்க நோயாளியின் நலனை மையமாகக் கொண்ட நேர்த்தியான சேவைகளை வழங்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.  
 
இந்த மருத்துவமனையில் திறந்து வைத்து பேசிய டாக்டர்.  ராதாகிருஷ்ணன்,  குறுகியகால தங்கியிருப்பே அவசியப்படும் அறுவை சிகிச்சைகள் மீது கவனம் செலுத்தும் ஒரு நவீன மருத்துவமனையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.   


இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலுமிருந்து சிகிச்சைக்காக நோயாளிகளை ஈர்ப்பதில் இது சிறப்பான பங்காற்றும் என்றும் அல்ஃபா கேர் மருத்துவமனை, செழித்தோங்கி வளர்ந்து, சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கி வெற்றிவாகை சூட  வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.