ராமர் கோவில் திறப்புக்கு மருத்துவமனைக்கு விடுமுறை! அவசரமாக உத்தரவை திரும்ப பெற்ற எய்ம்ஸ்!
நாளை ராமர் கோவில் கும்பாபிசேகத்தை ஒட்டி எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நாளை கும்பாபிஷேகம் செய்து திறந்து வைக்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் இன்றே அயோத்திக்கு புறப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாட்டில் உள்ள அதிநவீன முக்கியமான மருத்துவமனைகளான டெல்லி எய்ம்ஸ், புவனேஸ்வர் எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு நாளை பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது தனது அறிவிப்பை திரும்ப பெற்றுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ சேவைகள் வழக்கம்போலவே தொடரும் என அறிவித்துள்ளது. விடுமுறை அறிவித்து உடனே அதை திரும்ப பெற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K