1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:53 IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: என்ன காரணம்?

முன்னாள் பிரதமர்ர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதன்பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தன்னை சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையீல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே  தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
 
இந்த நிலையில் தற்போது தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சாந்தன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணை வர வாய்ப்பு உள்ளது.
 
Edited by Mahendran