வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (14:34 IST)

பிரபல ஓட்டலில் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி, மயக்கம்!

hotel
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை குன்றத்தூர் அஞ்சுகம் நகரில் வசிப்பவர் ஷேக் ஜலாலுதீன்(36) இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததை அடுத்து, தன் உறவினர்களுக்கு உணவு விருந்து அளிக்க முடிவு செய்தார்.

எனவே  நேற்றிரவு சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் உணவு புக்கிங் செய்தார். அங்கு தன் உறவினர்கள் 62 பேருடன் சாப்பிடச் சென்றார்.

அவர்களுக்கு அசைவ  உணவு வழங்கப்பட்ட நிலையில், இதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் உறவினர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உணவக மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டு, உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்  தற்காலிகமாக இந்த ஓட்டலை மூட உத்தரவிட்டனர்.