1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tribute to actor Simbu at Vijayakanth Memorial

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சிம்பு அஞ்சலி.! திருமதி. பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்.!!

simbu
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சிம்பு மரியாதை செலுத்தினார்.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத் துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில்  தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்திற்கு அவர் நேரில் சென்றார்.   அங்கு, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த கேப்டனின் புகைப்படத்திற்கு நடிகர் சிம்பு மரியாதை செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் இரண்டு மகன்களும் உடன் இருந்தனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் அல்ஃபா கேர் மருத்துவமனை உதயம்..! திறந்து வைத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..!