அதிமுக அலுவகம் சூறை: ஓபிஎஸ் உள்ளிட்ட 3 மீது வழக்குப் பதிவு!
ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள வானகரத்த்தில் இபிஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தினர். அப்போது முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதவாளர்கள் அதிமுக தலைமை அலுவலத்தை முற்றுகையிட்டனர் .
இதில் ஏற்கனவே கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கைகலைப்பாக மாறியது.
அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அலுவலகக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். அதன்பிம், அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்களைத் தூக்கிச் சென்றதாக சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.