திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (17:29 IST)

எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே.பி.முனுசாமி: கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்

KP Munisamy
எடப்பாடி பழனிசாமி உடன் உள்ள எட்டப்பன் கேபி முனுசாமி தான் அதிமுகவின் அழிவுக்கு காரணமென ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளது என்பதும் இரு அணியைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் அதிமுகவின் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எடப்பாடிபழனிசாமியும் அவருடன் இருக்கும் கேபி முனுசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
கட்சி அழிவுப்பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடி உடன் உள்ள எட்டப்பன் கேபி முனுசாமி தான் காரணம் என்றும் அவருக்கு வாய் தான் மூலதனம் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது