திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:59 IST)

தெற்கு அந்தமான் பகுதியில் மீண்டும் புயலா? தாங்குமா தமிழ்நாடு?

pressure
தெற்கு அந்தமான் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் புயல் உருவாகும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது என்பதும் அதனால் சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் கனமழை பெய்தது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழு தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் இது புயலாக மாறுமா என்பதை ஓரிரு நாட்கள் கழித்தே தெரியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva