1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says about today rain

தமிழகத்தில் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

meteorological
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வடதமிழ்நாட்டில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதன் காரணமாக வட தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
65.33 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!