வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (13:48 IST)

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

Annamalai
விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர் என்றும், இடை தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகமாக இருக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது, பாமக வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படாது, ஆனால் மக்களின் அதிருப்தி வெளிப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.
 
மேலும் தேர்தலில் 3வது, 4வது இடம் வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் அதிமுக போட்டியிடவில்லை என்றும், "திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அதிமுக போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
 
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த திமுக அரசு, நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, நீட் தேர்வை எதிர்க்கின்றனர் என்றும்  அண்ணாமலை கூறினார்.
 
Edited by Mahendran