1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM stalin visit rescue operation places

புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

cm stalin1
புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். இந்த நிலையில் புயலில் சேதமடைந்த விசைப்படகுகள் விரைவில் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நேரில் நிவாரணம் வழங்கினார். இந்த நிலையில் மாண்டஸ் புயலால் விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் சிறப்பாக செயல் பட்டதை அடுத்து அனைவருக்கும் தன்னுடைய நன்றி என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?