Daily Horoscope
✕

செந்தில் பாலாஜி விடுதலை: அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர், அமைச்சர்கள் நீக்கம்?

Written By Siva
Updated: வியாழன், 26 செப்டம்பர் 2024 (11:38 IST)
ஒரு ஆண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, அவர் இன்று மாலைக்குள் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி விடுதலை ஆகி வெளியே வந்தவுடன், அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்படும் என்றும், இதனை அடுத்து, அவர் மின்சாரத்துறை உள்பட சில துறைகளின் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவை பதவி வழங்கும் போது, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது, செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படுவதோடு, இரு அமைச்சர்களின் பதவிகள் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுவது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில், அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

எல்லாம் காட்டு

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை! - நிஷாந்த் சிக்கியது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments