உள்ளாட்சித் தேர்தல் - ஆலோசனை கூட்டத்தை கூட்டும் அதிமுக!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிமுக ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிமுக ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.