புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (06:57 IST)

இன்று வெள்ளை அறிக்கை: 10 ஆண்டுகளில் அதிமுக அரசின் நிர்வாகம் வெளிச்சத்துக்கு வருமா?

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை இன்று காலை பதினொன்றரை மணிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட உள்ளார் 
 
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக அரசின் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எந்தெந்த வழிகளில் செலவிடப்பட்டது என்ற அம்சங்கள் அந்த வெள்ளை அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று வெளியாகும் வெள்ளை அறிக்கை சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது